• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன் கோவிட் 19 தடுப்பூசி திட்டத்தில் அரசுடன் கைகோர்க்கிறது!

August 21, 2021 தண்டோரா குழு

வி நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு செயல்பாட்டு பிரிவான வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன், அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையின் கீழ் செயல்படும் சிஎஸ்சி எனப்படும் பொது சேவை மையங்களுடன் இணைந்து, உயிர்கொல்லி வைரஸான கோவிட்-19-க்கு எதிராக லட்சக்கணக்கான மக்களை கோவின் போர்ட்டல் இணையதளத்தில் பதியச் செய்வதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, மிகவும் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினரை மையப்படுத்தி இது செயல் படுத்தப்பட உள்ளது.
சிஎஸ்சி, சிஎஸ்ஆர், சிஎஸ்சியின் கல்விப் பிரிவு ஆகியன இணைந்து கிராம அளவிலான தொழில் முனைவோர் வாயிலாக நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேலான பயனாளிகளை இத்திட்டத்தில் பதிவு செய்யவும், பட்டியலிடவும் முடிவு செய்துள்ளன. பொதுமக்களில் முதியவர்கள், ஏழைகள், பின்தங்கியோர், குடிசைவாசிகள், அன்றாட தினக் கூலி பணியாளர்கள் உள்ளிட்டோரை அடையாளம் காணவும், அவர்களை இத்திட்டம் சென்று சேரவும் கிராம அளவிலான தொழில் முனைவோர்கள் முக்கிய பங்காற்றுவர்.

இத்திட்டம் குறித்து சிஎஸ்சி, எஸ்பிவியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் தினேஷ் தியாகி கூறுகையில்,

மக்களுக்கு பயன் அளிக்கும் சமூக முன்னெடுப்பு திட்டங்களுக்கு சிஎஸ்சி எப்போதும் ஆதரவு அளித்து வந்துள்ளது. அனைவருக்கும் சுகாதாரம் என்ற எங்களது பொறுப்புணர்வு மிக்க செயல்பாட்டில் பங்கேற்றுள்ள சிஎஸ்சி, கோவின் செயலியில் பொதுமக்களை பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையும் அது போன்ற ஒரு செயல்பாடாகும். வோடஃபோன் ஐடியா பவுண்டேஷனுடன் நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த பிணைப்பானது, நாடு முழுவதும் உள்ள சமூகத்தில் மிகவும் பின் தங்கிய, விளிம்பு நிலை மக்களை சென்றடைந்து அவர்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது.

மேலும் கோவிட்-19 வைரஸ் ஒழிப்புக்கான அரசின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் அனைவரையும் கோவின் ஆப் செயலியில் பங்கேற்கச் செய்வதையும் குறிக்கோளாக கொண்டது என்றார்.

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் ஒழுங்குமுறை தலைவர் மற்றும் நிறுவன விவகார அதிகாரி P. பாலாஜி
கூறுகையில்,

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அயல் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிப்புகளையும் நாங்கள் நம்புகிறோம். சி.எஸ்.சி உடனான எங்களின் இந்த முயற்சி, கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய 10 லட்சம் மக்களை சென்றடையும் வாய்ப்பை ஏற்படுத்தும். பின்தங்கிய கிராமப்புற குடிமக்கள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள மக்கள், குடிசை வாழ் மக்கள் ஆகியோருக்கு சீராக்கப்பட்ட டிஜிட்டல் பதிவு முறையின் முதுகெலும்பாக திகழும் கோவின் ஆப் பதிவு சேவையை வழங்கி ஒற்றை சேவை தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தின் வீரிய செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் நோக்கமாகும், என்றார்.

இணையம் / ஸ்மார்ட்போன் அல்லது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வசதியில்லாத பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படாத குடிமக்களுக்கு இந்த முன்னெடுப்பு முன்னுரிமை அளிக்கும். கிராம அளவிலான தொழில் முனைவோர், கோவின் ஆப்பில் குடிமக்களின் தகவல்களை நேரடியாக பதிவு செய்வார்கள். செயலியின் செயல்பாட்டின் அடிப்படையில் உள்ளூர் தடுப்பூசி செலுத்துனர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, தடுப்பூசி போடும் நாளும் நேரமும் முடிவாகும்.

குடிமக்களை ஒருங்கிணைக்கவும், கோவின் செயலியில் பதிவு செய்ய உதவவும், சி.எஸ்.சியை தேசிய சுகாதரா ஆணையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது. சி.எஸ்.சி டிஜிட்டல் சேவா போர்டலில் உள்ள மத்திய தகவல்பலகையின் உதவியுடன் திட்டத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க தனி குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பில் அறிக்கை தயாரித்தல், குறைதீர்வு கையாளுகை, தினசரி நிலை அறிதல் போன்றவை அடங்கும். இந்த இணைப்பின் வழியாக பயனாளிகள் தங்கள் ஆதார் எண்களை பயன்படுத்தி கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை தருவித்துக் கொள்ளலாம்.

வோடஃபோன் ஐடியா பவுண்டேஷன், சி.எஸ்.சி அகாடெமியுடன் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டு, 30 நடமாடும் வேன்களை பயன்படுத்தி அடித்தட்டு மக்களுக்கு நிதி மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடத்தில் இருந்து, இந்த வேன்கள், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பொருள் விநியோகத்துக்கும் பெரும் அளவில் பயன்படுத்தியது.

பொது சேவை மையங்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொது சேவை மையங்கள் முக்கிய திட்டமாகும். சி.எஸ்.சிகள் பி2சி சேவையைத் தவிர அரசு மற்றும் தனியாரின் பொது பயன்பாட்டு சேவைகள், சமூக நலத்திட்டங்கள், நிதி சேவைகள், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற உதவி வருகின்றன. இந்திய முழுவதும் கிராமப்புற, வளரும் நகர்புறம், நகர்புறங்களில் உள்ள கிராமப்புற மக்களுக்கு அரசு மற்றும் பொது சேவைகளை வழங்கும் மையங்களாக 3.90 லட்சம் பொதுச் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் படிக்க