January 11, 2022
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் தரணேஸ்வரன் (வயது 6). இந்த சிறுவனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக சிறுவன் திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 7-ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவனுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் நேற்று முன்தினம் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.