October 12, 2018
தண்டோரா குழு
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என பாடகி சின்மயி கூறியுள்ளார்.
இந்தியாவில் #metooஎன்னும் ஹேச்டேகின் மூலம் பென்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.இதற்கிடையில், தமிழகத்தில் பின்னணி பாடகி சின்மயி மீடு இயக்கம் மூலம் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். இதையடுத்து, #MeTooவிவகாரத்து பல்வேறு திரைபிரலங்ககள், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,
பாலியல் புகார்களை சொல்லும் சூழல் சமூகத்தில் தற்போதுதான் உருவாகியுள்ளது.ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என பலரும் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு வயதில் நடந்ததை எல்லாம் ஆண்கள் வெளிப்படுத்தியுள்ளீர்களா? தற்போது பல்வேறு உண்மைகள் வெளியேவரத்துவங்கியுள்ளன பல முன்னணி நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். என்னுடன் பணியாற்றும் பாடகிகளுக்கான நான் குரல் கொடுத்து வருகிறேன்.பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறவில்லை. என் பக்கம் உண்மை இருக்கிறது என்பது வைரமுத்துவிற்கே தெரியும். இதனால் எனக்கு சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. வைரமுத்து மீது புகார் கொடுக்க அப்போது துணிச்சல் இல்லை, இப்போது எனக்கு பயம் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை. புகார் அளித்ததால் எனக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை.ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும். வைரமுத்து மீது போலீசில் புகார் அளிப்பது பற்றி வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனக் கூறினார்.