March 31, 2018
தண்டோரா குழு
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடத்திய நடைபயணத்தில் மதிமுக தொண்டர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்து மேடையை நோக்கி ஓடி வந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்ததை அடுத்து மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ, அந்த தொண்டரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதியுங்கள். இயற்கை அன்னை அந்த தொண்டரை எபப்டியாவது காப்பாற்றி தரவேண்டும்.தீக்குளிக்க வேண்டாம் என ஏற்கனவே நான் தொண்டர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன் எனக் கூறினார்.இதைதொடர்ந்து, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ தனது நடைபயணத்தை தொடங்கினார்.