• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலையில் பூச்சி நோய் கட்டுப்பாடு, களை மேலாண்மை பயிற்சி

December 1, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஒரு நாள் கட்டணப் பயிற்சியை வரும் 7 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது.

ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் கிருஷ்ணன் இது பற்றிய அறிவிப்பில் கூறியதாவது, ஒரு நாள் கட்டணப் பயிற்சியில் அங்கக வேளாண்மையில் பூச்சி நோய் கட்டுப்பாடு, களை மேலாண்மை, சத்துக்கள் மேலாண்மை மற்றும் அங்கக வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றிய தகவல்கள் தரப்படுவதோடு, அங்கக இடுபொருள் தயாரிப்பு முறைகளும் செய்முறைப் பயிற்சியாக கொடுக்கப்படும் அங்கக வேளாண்மை பற்றிய புத்தகம் ஒன்றும் வழங்கப்படும்.

ஒருவருக்கான கட்டணம் வரி உட்பட ரூபாய் 590 ஆகும். கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி 38918523789 என்ற வங்கிக் கணக்கில் செலுத்தி ரசீதை பயிற்சியின் போது கொண்டு வர வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்.

முன்பதிவு செய்வதற்கும் மற்றும் தகவல்களுக்கும் மையத்தின் பேராசிரியர் ராமசுப்பிரமணியன்
9486734404 என்ற கைபேசி எண்ணிற்கு அழைக்குமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க