• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

December 10, 2020 தண்டோரா குழு

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினரும், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக, திவிக, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க