November 19, 2021
தண்டோரா குழு
மத்திய அரசின் 3 வேளாண் சட்ட சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாரத பிரதமர் இன்று அறிவித்ததை அடுத்து,தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், விவசாயிகள் போராட்டத்தின்போது மரணம் அடைந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரியும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.விவசாயிகளின் நலன் கருதி இம்முடிவை எடுத்துள்ள மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.