November 19, 2020
தண்டோரா குழு
வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
கோவை சிவானந்தாகாலணி பகுதியில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
வருகின்ற 22 ம் தேதி வெற்றிவேல் யாத்திரை கோவையில் நடைபெறுகிறது. சிவானந்தா காலணி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் எனவும், இந்த பொதுக்கூட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கோரியுள்ள நிலையில், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும் வ.உ.சி. மைதானத்தில் அரசியல் காரணங்களால் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை எனவும், வேல்யாத்திரையை கண்டு தமிழக அரசு பயந்து போயுள்ளது எனவும் கூறிய அவர், காவல் துறை தடை விதித்தால் தடையை மீறி யாத்திரை நடைபெறும் எனத் தெரிவித்தார்.