April 12, 2018
தண்டோரா குழு
வேலையில்லாதவர்கள் தான் அறிவில்லாத விஷயங்களுக்காக போராடுவார்கள் என நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்துள்ளது.
இதையடுத்து,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியே திரும்பி போ என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.GoBackModi என்ற ஹாஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்ததுள்ளது.
இந்நிலையில்,இதுபோன்ற ஹேஷ்டேக்குகளில் உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம்.இது ஒன்னும் அவ்வளவு முக்கியமான ஹேஷ்டேக் இல்லை என நடிகை காயத்திரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.அதற்கு “இப்போதே 6 லட்சத்துக்கு 77 ஆயிரம் பேர் “கோ பேக் மோடி” ஹேஷ்டேக்கில் டிவீட் செய்து இருக்கிறார்கள்.இன்னுமா இது முக்கியமான ஹேஷ்டேக் இல்லை என்று சொல்கிறீர்கள்.கணிணி வைத்து எல்லாம் பொய்யாக இத்தனை புது புது டிவீட்டுகளை போட முடியாது” என்று ஒருவர் எதிர் கருத்து கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து,இதற்கு பதில் அளித்துள்ள காயத்திரி ரகுராம் “இத்தனை டிவிட்டுகளும் காசு கொடுத்து காங்கிரஸ் கட்சி மூலம் டிவிட் செய்யப்பட்டது.மக்கள் என்ன வேலையில்லாதவர்களா? வேலையில்லாதவர்கள் தான் அறிவில்லாத விஷயங்களுக்காக போராடுவார்கள்.ஏன்?மக்களை இப்படி திசை திருப்புகிறார்கள்”.என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.