February 2, 2021
தண்டோரா குழு
ராஜ வீதியில் பாஜக மக்கள் சேவை மையத்தின் சார்பில் மோடி முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,
கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு வார்டிலும் மோடி முகாம் நடைபெறுகிறது. 21ம் தேதி வரையில் இது நடைபெறும். இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் நடைபெறாது என்றும் தெரிவித்தார்.பிரதமரின் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு போய் சேர்ப்பதே இதன் முக்கிய திட்டம் என்று கூறிய அவர் இதில் 5லட்சம் வரையிலான மருத்துப காப்பீட்டு திட்ட அடையாள அட்டை எடுத்து தரப்படும். 1-10 வயது பெண் குழந்தைகள் இருந்தால் செல்வமகள் திட்டத்தில் இணைக்கலாம். கண் காது பரிசோதனை செய்யப்படுகிறது.
மாற்று திறனாளிகளுக்கு தகுந்த அடையாள அட்டை இருந்தால் அவர்களுக்கு அரசாங்க உதவி உபகரணங்கள் உதவியையும் செய்து தருவோம் விபத்து காப்பீடு ஆயுள் காப்பீடு போன்ற அனைத்தையும் செய்து தருவோம் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை,
மோடியின் 191 திட்டம் நடைமுறையில் உள்ளது. தன்னார்வலர்கள் இதில் சேரும் போது பிரதமரின் திட்டங்கள் 100% யை எட்டும். அரசியலை தாண்டி பிரதமரின் திட்டங்கள் மக்களிடம் சேர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். 26ம் தேதியன்று இரண்டு அமைப்புகள் போராட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை தாண்டி தான் இருந்தது. பாரத பிரதமரை அவர்கள் காட்டிய விதம் கண்டிக்கத்தக்கது.
இதை கண்டித்து பாஜக நடத்திய போராட்டம் நடைபெற்றதில் கலவரம் நிகழ்ந்துள்ளது. இதை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனபது தான் எங்கள் கோரிக்கை. பாஜக மதம் சார்ந்த அரசியல் செய்யாது. கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை பற்றி பேசியதில் என்ன தவறு உள்ளது? என்னை பொறுத்தவரை யாரொ திட்டம் போட்டு தேர்தல் களத்தில் வன்முறையை தூண்டி சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் வெளிபாடுதான் கொடைக்கானல் சம்பவம் மேட்டுப்பாளையம் சம்பவம் என்று தெரிவித்தார்.