• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

March 16, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு காலியாக இருந்து வந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. மற்ற கட்சிகள் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திமுக வேட்பாளராக அக்கட்சியின் ஆர்.கே. நகர் பகுதி செயலாளர் மருது கணேஷ், தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்னர்.

மேலும் படிக்க