March 29, 2018
தண்டோரா குழு
வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் என காவிரி விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.எனினும், இதுவரை வாரியம் அமைக்கபடவில்லை.இதனை தொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது.மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது.உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் என கூறியுள்ளார்.