• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண்களுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சி கோவையில் துவக்கம்

November 1, 2025 தண்டோரா குழு

தென்னிந்தியாவின் முதல் முறையாக மணப்பெண்ணுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சியை கோவையில் வேகா ஜூவல்லரி நடத்துகிறது. காலத்தால் அழியாக கலைநயமிக்க நவீன கம்பீரமான நகை காட்சி 2025 நவம்பர் 1, மற்றும் 2 தேதிகளில், கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடக்கிறது.

நேர்த்தி,கைவினை, பாரம்பரிய கலைநயத்திற்கு பெயர் பெற்ற வேகா ஜூவல்லரி, கோவையில் நவம்பர் 1, 2 தேதிகளில் தென்னிந்தியாவின் முன்பு எப்போதும் நடக்காத மணப்பெண் அழகு மிளிரும் நகை கண்காட்சியை நடத்துகிறது.

வேகா ஜூவல்லரி 20 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்த்தியான, வளமையான தொகுப்புகளை கொண்ட நகைகளை தேர்வு செய்து காட்சிப்படுத்தியுள்ளது. தங்கம், வைரம், போல்கி மற்றும் சிஸ் நகைகளை கொண்டுள்ளது. தலைமுறைகள் கடந்த புரவலர்களின் இதயங்களை வென்றுள்ளது. குறிப்பிடத்தக்க இந்த நிகழ்வில், வேகா கலை நயமிக்க, பாரம்பரிய நகைகளை கோவையின் மணப்பெண்களின் மனம் கவர காட்சிப்படுத்துகிறது. ஒரே கூரையின் கீழ் இத்தகைய நுண்கலை மணப்பெண் நகைகளை காண்பது அரிதான வாய்ப்பு.

உத்வேகம் அளிக்கும் நேர்த்தியான பாரம்பரிய நிகழ்வு – இந்த மாபெரும் நகை கண்காட்சி, காலாச்சாரத்தையும் கைவினை திறனையும் பிரதிபலிப்பதாக மட்டும் அல்ல, பாரம்பரியத்தை சந்திக்கும் புதிய கண்டுபிடிப்புகளாக இருக்கும். இதை எதிரொலிப்பது தான் வேகாவின் வடிவைமப்பு தத்துவம். இங்கு இடம் பெறும் ஒவ்வொரு நகையும், பாரம்பரியத்தின் கதை சொல்லும். காலத்தால் வெல்ல முடியாத அழகையும், அன்பையும் வெளிப்படுத்தும். மரபு வழியோடு சொகுசை விரும்பும் புதுப் பெண்களுக்கென பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்டவை இவை. வேகாவின் மணப்பெண் நகைகளில் விருந்தினர்களும் தன்னிலை மறப்பார்கள்.

நுண்ணிய போல்கி தொகுப்புகள், மணப்பெண் வைர நகைகள், குந்தன் கலை திறன்கள், கோயில் தங்க நகைகள், குறைந்த அளவிலான பாரம்பரிய படைப்புகள் கண்காட்சிக்கென வடிவமைக்கப்பட்டுள்ளன.

துவக்க விழா நிகழ்விற்கு கவுரவ விருந்தினராக கோவை எமரால்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கே. சீனிவாசன் பங்கேற்றார். மேலும், ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக அரங்காவலர் .டி. ஆர். கே.. சரஸ்வதி ,திருப்பூரில் சிறந்த தொழில் முனைவோராகவும், ஜவுளி மற்றும் வடிவமைப்பில் சிறந்தவராகவும் திகழும் டேப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஜெ. வி. சாலினி பங்கேற்றனர்.

காலத்தில் நீடிக்கும் புத்திசாலித்தனத்தை தரும் வேகாவின் அனுபவம் : கலாச்சார வளமையையும்,துடிப்பான மணப்பெண்களின் நிலமாகவும் விளங்கும் கோவையில் இந்த கண்காட்சியால், வேகா தனது பாரம்பரியத்தையும் தருகிறது. கலைநயம், புதுமையுடன் உணர்வுமிக்க இணைப்பையும் தருகிறது. இதுவே வேகாவின் 20 ஆண்டு பயணத்தின் வரையறையாக இருக்கும்.

மேலும் படிக்க