வெள்ளை மாளிகையின் பிரதான அதிகாரி அன்ஜலா ரீட் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க நாட்டின் பிரபலமான ரிட்ஸ் கார்ல்டன் என்னும் 5 நட்சத்திர விடுதியில் பணியாற்றிக்கொண்டிருந்த அன்ஜலா ரீட் கடந்த 2௦11ம் ஆண்டு பிரதான அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் இரண்டாவது ஆப்ரோ அமெரிக்கர் அன்ஜலா ரீட் ஆவார்.
இவர் வெள்ளைமாளிகையில் உள்ள சுமார் 132 அறைகளில் ஒவ்வொரு நாளும் நடக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும், அங்கு பணிபுரியும் ப்ளம்பர்ஸ், பட்லர்கள், சமையல் ஆட்கள், மின் வல்லுநர்கள் உள்ளிட்ட 9௦ ஊழியர்களை மேற்பார்வை செய்யும் பணி அவருடையது.
அதோடு அமெரிக்க அதிபர் குடும்பத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இது குறித்து வெள்ளைமாளிகை செய்திதொடர்பாளர் சாரா ஹக்காபீ சண்டேர்ஸ் கூறுகையில்,
“அன்ஜலா ரீட் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி உண்மையானது. கடந்த 2௦11 ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையில் பணியமர்த்தப்பட்டார். எதற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதிகாரிகள் அவரை நல்ல முறையில் வழியனுப்பி வைத்துள்ளனர்.
புதிய அரசு அதிகாரத்திற்கு வரும்போது, அதிகாரிகளை மாற்றுவது வழக்கம். பதவிக்கு வரும் புதிய அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாங்கள் விருப்பும் நபரை, பிரதான அதிகாரிகளாக நியமிப்பர். ஒரு வேலை அதற்காக தான் அங்கேலா ரீட்வை பணி நீக்கம் செய்திருக்கலாம்” என்றார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்