• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 32 அதிநவீன கேமரா – கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் திறந்து வைப்பு

November 21, 2019 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 32 அதிநவீன கேமரா மற்றும் போத்தனூர் புற நகர் காவல் கட்டுப்பாட்டு அறையை கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் திறந்து வைத்தார்.

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மொத்தம் 80 பிளாக்குகளும், 2846 குடியிருப்புகளும் உள்ளது. கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து மாற்றப்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். குடியிருப்பு அருகே சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், அதனை கட்டுப்படுத்த போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படி வெள்ளலூர் குடியிருப்பில் பேருந்து நிலையம் முதல்
அனைத்து தெருவிலும் சுமார் 32 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் போத்தனூர் புற காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இந்த சி.சி.டி.வி கேமரா மற்றும் புற காவல் கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல் ஆணையர் சுமித்சரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன், துணை ஆணையர் (குற்றம்) உமா, துணை ஆணையர் காவலர் பயிற்சி தலைமையகம் செல்வகுமார், உதவி ஆணையர் செட்ரிக் இமானுவேல், போத்தனூர் ஆய்வாளர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புற காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் சி.சி.டி.வி பொருத்த உதவியாக இருந்த குடியிருப்பை சேர்ந்த அம்பி என்ற ரங்கசாமி என்ற இளைஞருக்கு பொன்னாடை போத்தி கவுரவிக்கப்பட்டது.

மேலும் புற காவல் கட்டுப்பாட்டு அறை அருகே பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் குழாயும் பொருத்தப்பட்டது.

மேலும் படிக்க