• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் 60 சதவீதம் நிறைவு

January 4, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் காந்திபுரத்தில் டவுன் பேருந்து நிலையம்,மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் என 4 பேருந்து நிலையங்கள் உள்ளன.

மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, சிவகாசி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், வளர்ந்து வரும் கோவை மாநகரை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 178 கோடி ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி செய்யப்பட உள்ளது. மேலும், இந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகம், உணவு விடுதி, விளம்பர பலகைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.விரைவில் பணிகள் முடிக்கப்படும்’’ என்றார்.

மேலும் படிக்க