• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூரில் மறைமுக தேர்தல் நடைபெறும் நிலையில் பதற்றம்,சிலருக்கு மண்டை உடைப்பு

March 26, 2022 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் பிரச்சனை எழுந்ததால் போலீசார் தடியடி நடத்தினர்.

வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.தலைவர் பதவிக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த மருதாச்சலம் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

தூணைதலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த கணேசன் போட்டியிடுகிறார்.அதிமுகவிற்கு பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 4 ஆம் தேதி வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் திமுகவினர், வாக்கு சீட்டை கிழித்தும், வாக்கு பெட்டியை தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே வீசி எறிந்தும் அராஜகத்தில் ஈடுபட்டதால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து நீதிமன்றம் சென்ற அதிமுக பேரூராட்சி உறுப்பினர்கள் நீதிமன்றம் சென்றதையடுத்து. நீதிமன்ற உத்திரவுபடி தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
சிறப்பு தேர்தல் அலுவலர்களாக கோவை தெற்கு வருவாய் கோட்டாச்சியர் இளங்கோவன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலராக கமலகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் அதிமுகவின் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்கள் தேர்தலில் கலந்துகொள்வதை தடுக்க அவர்கள் வந்த கார் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தியதுடன் அதிமுகவினரையும் திமுகவினர் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தினர்.இதனிடையே இன்றும் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு அருகே திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் திமுக.,வினர் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் திமுக தொண்டர் செந்தில்குமார் உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழலில், வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க