• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளத்தில் சிக்கிய தம்பதி கடும் போராட்டத்துக்கு பின்பு மீட்பு

June 13, 2018 தண்டோரா குழு

கேரள மாநிலம் அட்டப்பாடியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 நாட்களாக தவித்துவந்த தம்பதியனரை நீண்ட போராட்டத்திற்குப் பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

தமிழக – கேரள எல்லை பகுதியான அட்டப்பாடி உள்ள சாவடியூர் கிராமத்தின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. தென்மேற்கு பருவ மழையில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதுவும் கேரளாவில் மழை தீவிரமடைந்த நிலையில் அட்டப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பவானி ஆற்றை சுற்றி உள்ள கிராமத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பவானி ஆற்றைக் கடந்து விவசாய பணிக்குச் சென்ற சுகுணன், வல்சம்மா என்ற முதிய வயது தம்பதி வெள்ளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டனர். இதையடுத்து ஆற்றைக் கடந்து ஊருக்குள் வரமுடியாமல் கடந்த 5 நாட்களாக வெள்ளத்தின் நடுவே கனமழையில் உணவுயன்றி சிக்கித் தவித்த வந்துள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததை யடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்திற்கு பின்பு அந்த தம்பதி இன்று பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அட்டப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க