March 27, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் வெளியே சுற்றுவோரை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் தடையை மீறி சிலர் வெளியே சுற்றி வருக்கிறார்கள். தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வெளியே சுற்றுவோரை கண்காணிக்க ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. காவல்துறை பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தாமரைக்கண்ணன், சேஷசாயி, சீமா அகர்வால் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் குழுவில் உள்ளனர்.