January 22, 2020
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் அம்பிகா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். பிஎஸ்சி பட்டதாரியான இவர் காட்டூர் விவேகானந்தா ரோட்டில் ட்ராவல்ஸ் அலுவலகம் நடத்தி வந்தார்.மேலும் வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து இருந்ததாக தெரிகிறது.
இதனை நம்பிய கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் சேர்ந்த பி இ பட்டதாரி ஜெயகாந்த் என்பவர் மோகன்ராஜிடம் ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கொடுத்துள்ளார். அதுபோல் மேலும் சிலர் பணம் கட்டியுள்ளனர். ஆனால் மோகன்ராஜ் கூறியபடி யாரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில தினங்களாக மோகன்ராஜ் நடத்திவந்த அலுவலகம் பூட்டி கிடந்தது இதுதொடர்பாக ஜெயகாந்த் உள்ளிட்ட பாதிக்கப் பட்டவர்கள் காட்டூர் போலீசில் புகார் செய்தனர் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர் விசாரணையில் மோகன்ராஜ் 10க்கும் மேற்பட்டவர்களிடம் ரூபாய் 20 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர்.