• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் தனது வாடிக்கையாளர்களுக்காக ‘நியோ’ உடன் ஒப்பந்தம் செய்து’ஸீரோ ஃபாரெக்ஸ் மார்க்அப்’ கார்ட் சேவை விஐ அறிமுகம்

December 20, 2025 தண்டோரா குழு

தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான விஐ, இந்த விடுமுறைக் காலத்தில் வெளிநாடு செல்லும் தனது வாடிக்கையாளர்களுக்கு ‘ஜீரோ மார்க்அப் ஃபாரெக்ஸ்’ கார்டுகளை வழங்குவதற்காக, பயண வங்கிச் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமான நியோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இத்தகைய கூட்டு செயல்பாடு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம், சுற்றுலா, வணிகம் அல்லது உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் விஐ வாடிக்கையாளர்கள், விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நியோ ஸீரோ ஃபாரெக்ஸ் மார்க்அப் தங்கள் வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ள முடியும். விஐ நிறுவனத்தின் நியோவுடனான இந்தக் கூட்டு செயல்பாட்டின் மூலம், தனது பயணச் சேவை திட்டங்களில் நிதி சார்ந்த வசதிகளையும் விஐ இணைத்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ‘ விஐ ஆப்’ மூலமாகவே இந்த நியோ ஃபாரெக்ஸ் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். நியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு கே.ஒய்.சி சரிபார்ப்பு, கார்டை செயல்படுத்துதல் மற்றும் சோதனைப் ஆகியவற்றை மேற்கொள்ள உதவுவார். வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர் மற்றும் பின்கோடு விவரங்களை உள்ளிட்டு, ‘நியோ எக்ஸ்பிரஸ்’ சேவை தங்கள் பகுதியில் உள்ளதா என்பதை அறியலாம்.

எக்ஸ்பிரஸ் சேவை இல்லாத இடங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள், நியோ செயலியைப் பதிவிறக்கம் செய்து டிஜிட்டல் முறையில் கார்டை பயன்படுத்தும் வசதியை தொடங்கலாம். விஐ வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக அறிமுகச் சலுகையாக இந்த சேவையின் அறிமுகத்தைக் கொண்டாடும் வகையில், நியோ நிறுவனம் தனது ஆண்டுக்கு ரூ. 999 மதிப்புள்ள ‘நியோ பிரீமியம்’ சேவையை விஐ வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

இதில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள்:பயணச் செலவுகளில் ஆண்டுக்கு ரூ. 10,000 வரை சேமிப்பு,நியோ செயலி மூலம் விசா மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ‘கன்வீனியன்ஸ் கட்டணம்’ கிடையாது.நியோ செயலில் மேற்கொள்ளப்படும் சர்வதேச ஹோட்டல் முன்பதிவுகளில் உடனடியாக 10% தள்ளுபடி.ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு முறை ‘லவுஞ்ச்’ பயன்படுத்துவதற்கான அனுமதி இலவசம்.ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு முறை ஏடிஎம்-ல் இலவசமாகப் பணம் எடுக்கும் வசதி.

180-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் இந்த நியோ ஃபாரெக்ஸ் கார்ட், சர்வதேசப் பரிவர்த்தனைகளை நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை மாற்று விகிதத்திலேயே மேற்கொள்கிறது. இதனால் வெளிநாடுகளில் செலவு செய்யும் போது வழக்கமாக வசூலிக்கப்படும் 3% முதல் 5% வரையிலான கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தவிர்க்கலாம்.

மேலும் படிக்க