• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்

June 18, 2025 தண்டோரா குழு

கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சேவையை செய்து வருகிறது ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம்.

தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என பல்வேறு நேரடியான கிளை அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் இந்த ஆண்டுக்கான பல்வேறு கல்வி உதவி திட்டங்களை அறிவித்துள்ளது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஷாலோம் எஜுகேஷன் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.

நிறுவனத்தின் இயக்குனர் அனிதா காமராஜ் பேசுகையில்,

வெளிநாடுகளில் மருத்துவம் பயில செல்ல ஆர்வமுடைய மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை எங்களது நிறுவனம் செய்து வருவதாக கூறிய அவர், அரசு புள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கென பிரத்தியேகமாக எவ்வித கட்டணமும் பெறாமல், இந்தியாவில் செலவாகும் அட்மிஷன், விசா, டாக்குமெண்டேஷன், விமான கட்டணம் என சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேவையை முற்றிலும் இலவசமாக வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

சுமார் 14 நாடுகளில் மருத்திவ கல்வி பயில்வதற்கான சேவைகளை வழங்கி வருவதாக கூறிய அவர்,வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்படுத்தி தருவதாக குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம் வழியாக வெளிநாட்டில் மருத்துவக்கல்வி (M.B.B.S/ M.D) பயில பதிவு செய்யும் முதல் 125 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 6 வருடத்திற்கான கல்வி கட்டணத்திலிருந்து 100 சதவீத விலக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க