• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெலிங்டனில் இராணுவ தினம்

January 16, 2017 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ முகாமில் இராணுவ தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இராணுவப் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் காடியாக் மற்றும் இராணுவ அதிகாரிகள் போர் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாடு சுதந்திரம் பெற்ற பின் இராணுவத் தளபதி பொறுப்பை ஆங்கிலேயரான சர் பிரான்ஸிஸ் பச்சரிடமிருந்து இந்தியாவின் தளபதி (மறைந்த ஃபீல்டு மர்ஷல் ) கே.எம். கரியப்பா 1948 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி ஏற்றார்.

இந்த வரலாற்று நிகழ்வைக் கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஜனவரி 15ம் தேதி இந்தியா இராணுவ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தையொட்டி, வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் உள்ள போர் நினைவுத் தூணில் இராணுவ பயிற்சி கல்லூரி தலைவர் காடியாக் மற்றும் இராணுவ அதிகாரிகள் திங்கள் கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் ஏராளமான இராணுவ அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் அவர்களின் குடும்பதினர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க