• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெகு விமரிசையாக நடைபெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலின் குடமுழுக்கு விழா

February 5, 2020

கோவையில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.குடமுழுக்கை முன்னிட்டு நேற்று இரவு முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்க