• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீரர்களுக்கான பண்டங்களை வெளியே விற்பதாகப் புகார்

January 11, 2017 தண்டோரா குழு

ராணுவத்தினருக்காக அனுப்பப்படும் உணவுப் பண்டங்கள், எரிபொருள் ஆகியவற்றை, ராணுவ அதிகாரிகள் பொதுமக்ககளிடம் பாதி விலைக்கு விற்கிறார்கள் என்று எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தகவல் தெரிவித்தனர்.

எல்லைப் பாதுகாப்பு படையின் 29வது படைப் பிரிவை சேர்ந்த ஜவான் தேஜ் பஹதூர் யாதவ் எல்லைப் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுகின்றன என்று புகார் கூறி, வாட்ஸ் அப் காட்சியைப் பரப்பிவிட்டார். அதில், “சில வேளைகளில் வெறும் வயிற்றோடும் படுக்கச் செல்கிறோம்” என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார். அவரது தகவல் சமூகவலைதளங்கள் மூலம் நாடு முழுவதும் பரவிவிட்டது.

இந்நிலையில், ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஹம்ஹமா எல்லைப் பகுதியில் ராணுவ அதிகாரிகள் இப்படி பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களை அருகில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள் என்று பொதுமக்களும் ராணுவ வீரர்களும் குற்றம் சாட்டினர். அவற்றை வாங்குவதால் கடைக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது என்று அவர்கள் கூறினர்.

பெயர் வெளியிட விரும்பாத ராணுவ வீரர் கூறுகையில், “காய்கறிகள், பருப்பு போன்றவை ராணுவ முகாமுக்கு வெளியே குறைந்த விலையில் விற்கப்படுவதால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிக்கப்படுகின்றன. நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் கூட எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. முகாமுக்கு வெளியே உள்ள அதிகாரிகளின் முகவர்களுக்கு விற்கபடுகின்றன” என்றார்.

சிவில் ஒப்பந்ததாரர் ஒருவர், “ஹம்ஹமா எல்லைப் பகுதியில் உள்ள அதிகாரிகளிடம் இருந்து பெட்ரோல், எல்லைப் பகுதி அதிகாரிகளிடமிருந்து மளிகைப் பொருட்கள் ஆகியவை மிகவும் மலிவான விலைக்குக் கிடைக்கின்றன” என்கிறார்.

ஆனால், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) சட்டம் ஒழுங்குப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர், “எங்களுக்குத் தரமான உணவு கிடைக்கிறது. உரிய வசதிகளும் தரப்படுகின்றன. இத்தகவல் சரி என்று தெரியவில்லை” என்றார்.

மேலும் படிக்க