January 26, 2021
தண்டோரா குழு
தமிழகம் மாவீரனாக போற்றும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில், ஆங்கிலேயன், ஜாக்சன் துரையாக நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர் சி.ஆர்.பார்த்திபன் இன்று காலமானார்.
வேலூரை சேர்ந்த, சி.ஆர்.பார்த்திபன், பட்ட படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு வந்து, எதேர்ச்சியாக ஹிந்தி சினிமா வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் தமிழகம் மாவீரனாக போற்றும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில், ஆங்கிலேயன், ஜாக்சன் துரையாக நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு உயிர்
கொடுத்தார்.
கிட்டத்தட்ட 120 படங்களில் நடித்திருக்கிறார். ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என ஐந்து முதல்வர்களுடன் தொடர்பில் இருந்த நடிகராகத் திகழ்ந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் இல்லாமல் இருந்த இவர், காலமாகியுள்ளார். இவருக்கு வயது 90.
பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.