June 16, 2018
தண்டோரா குழு
கோவை மேற்குதொடர்ச்சிமலையில் இருக்கும் ஆனைகட்டி பகுதியிலுள்ள மலைவாழ் கிராமம் கூட்டுப்புலிக்காடு.இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் விவசாய கூலிகளாகவும்,செங்கல் சூளைக்கும் வேலைக்கு செல்கின்றனர்.வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை நான்கரை மணியளவில் சாலை வழியாக வந்த ஒற்றை யானை வெள்ளியங்கிரி என்பவரது வீட்டை உடைத்து அரிசி இருக்கிறதா என தேடியுள்ளது.யானை வீட்டின் மேல்கூரையை உடைத்துள்ளதால் வீட்டினுள் இருந்தவர்கள் உள் அறைக்குள் சென்றதால் உயிர் பிழைத்தனர்.தற்போது காடுகளில் நல்ல மழை பெய்து யானைக்கு தேவையான உணவுகள் கிடைத்த போதும் அரிசியை தேடி வந்துள்ளது மலைவாழ் மக்களிடம் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது.