• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டு வாடகைதாரர்களின் பிரச்சினை பரிசீலிக்கப்படும் – முதல்வர்

March 30, 2020 தண்டோரா குழு

வீட்டு வாடகைதாரர்களின் பிரச்சினை பரிசீலிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 67 ஆக அதிகரித்துள்ளது. தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்து. தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் என்- 95 முகக் கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 1.5 கோடி முகச்கவசங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது.வீட்டு வாடகைதாரர்களின் பிரச்சினை பரிசீலிக்கப்படும். கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களே தனிமைப்படுத்தக்கொள்வதுதான். கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும். பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது.கொரோனா பரவலில் தமிழகம் 2வது கட்டத்திலிருந்து 3வது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. கொரோனா விஷயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் செய்வது என்பது தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க