July 23, 2021
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான வி, தனது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரானிக் சிம்கார்ட் என்றழைக்கப்படும் இ-சிம்-ஐ வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் இ-சிம் பயன்படுத்துவதற்கான வசதியுள்ள மொபைல்ஃபோன்களில் இனி போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் இ-சிம்-ஐ பயன்படுத்தமுடியும். இ-சிம் பயன்படுத்தும் வசதியுள்ள மொபைல்ஃபோன்களின் பட்டியலில், கீழ்கண்ட ப்ராண்ட்களின் குறிப்பிட்ட மாடல்கள் இடம் பெற்றுள்ளன.
ஆப்பிள்: ஆப்பிள் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ உள்ளிட்ட ஆப்பிளின் ஐபோன் மாடல்களில் இ-சிம் பயன்படுத்தலாம்.
சாம்சங்: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப், சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட், சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி, சாம்சங் கேலக்ஸி நோட் 20, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 2, சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ் 21+ 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ் 20, சாம்சங் கேலக்ஸி எஸ் 20+, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா ஆகிய சாம்சங் மொபைல்ஃபோன் மாடல்களில் இ-சிம்-ஐ பயன்படுத்தலாம்.
கூகுள் பிக்சல்: கூகுள் பிக்சல் 3வி மாடல் முதல், அடுத்தடுத்த மாடல்களில் இ-சிம்-ஐ பயன்படுத்தலாம்.
மோட்டோரோலா: மோட்டோரோலா ரேஸர் மாடலில் இ-சிம்-ஐ பயன்படுத்த முடியும்.
வி இ-சிம் சேவை தற்போது தமிழ்நாடு, மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், உத்தரபிரதேசம் -கிழக்கு, கேரளா, கொல்கத்தா மற்றும் மகாராஷ்டிரா அண்டு கோவாவில் கிடைக்கிறது. இ-சிம் பயன்படுத்தும் வசதியை அளிக்கும் மொபைல்ஃபோன்களை பயன்படுத்தும் வி போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள், இனி நெட்வொர்க்கிற்காக வழக்கமான சிம் கார்டை ஃபோனில் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட மாடல் மொபைல் ஃபோன்களில் இ-சிம் ஒருங்கிணைந்த சிம் சிப் வடிவத்தில் கிடைக்கிறது. இதனால் இ-சிம்-ஐ சேவையை அளிக்கும் அனைத்து மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களும் பயன்படுத்தக்கூடியதாக இச்சேவை இருக்கும். எனவே வழக்கமாக நாம் பயன்படுத்தி வரும் சிம் கார்ட்டை நாமாகவே மாற்றவேண்டிய தேவை இல்லாமலேயே, இனி வாடிக்கையாளர்கள் வழக்கமான குரல் அழைப்பு, எஸ்எம்எஸ், டேட்டா பயன்பாடு உள்ளிட்ட இன்னும் பல சேவைகளைப் பெற முடியும்.
வோடஃபோன் ஐடியாவின், தமிழ்நாடு மற்றும் கேரளாவின் க்ளஸ்டர் பிஸினெஸ் ஹெட் எஸ்.முரளி கூறுகையில்,
தமிழ்நாட்டில் எங்களது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக இ-சிம் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் வி பெரும் மகிழ்ச்சியடைகிறது. இந்த நவீன இ-சிம் தொழில்நுட்பமானது, ஒரே சிம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொபைல்ஃபோனில் ஒன்றிற்கு மேற்பட்ட சிம் கார்ட்களை பயன்படுத்தும் கூடுதல் சௌகரியத்தை, வசதிகளை அளிக்கிறது.எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ-சிம் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,ஏனெனில் இந்த புதிய இ-சிம் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல்ஃபோன்களில் இன்னும் பல அம்சங்களைப் பயன்படுத்த உதவுவதோடு மேம்பட்ட புதிய அனுபவத்தையும் அளிக்கும் என்றார்.
வி இ-சிம்-ஐ உங்கள் மொபைல்ஃபோனில் எவ்வாறு பெறலாம்?
தற்போது வி சிம்கார்ட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 199 என்ற எண்ணிற்கு “eSIM email ID” என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மின்னஞ்சல் இல்லையெனில் அதற்கு “email email id ” என்று டைப் செய்து 199 என்ற எண்ணிற்கு அனுப்பவும். இதற்கு பிறகு மின்னஞ்சலை பதிவு செய்த பிறகு நீங்கள் மீண்டும் இ-சிம் பெறுவதற்கான முயற்சியை மீண்டும் தொடரலாம்.உங்களது மின்னஞ்சல் பதிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என்பது உறுதிசெய்யப்பட்டவுடன் உங்களுக்கு 199 என்ற எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்திக்கு நீங்கள் இ-சிம் சேவை வேண்டுமென்ற கோரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் ESIMY என்ற செய்தியை அனுப்பவும் உங்களுடைய உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ்ஸை அடுத்து 199 என்ற எண்ணிலிருந்து மீண்டும் எஸ்.எம்.எஸ் ஒன்றை பெறுவீர்கள் அதில் தொலைபேசி அழைப்பின் மூலம் அச்சேவை கோரிக்கை வேண்டும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்த கேட்டுகொள்ளப்படுவீர்கள்.
குரல் அழைப்பில் உங்கள் சம்மதத்தை வழங்கிய பிறகு உங்களது பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு QR குறியீட்டைக் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்படும்.QR குறியீட்டை ஸ்கேன் செய்து இ-சிம்-ஐ செயல்படுத்த அதில் குறிப்பிட்டுள்ளபடி மேலும் தொடரவும்.வி சேவைகளைப் புதிதாகப் பெறும் புதிய வாடிக்கையாளர்கள் வி வழங்கும் புதிய வி இ-சிம் இணைப்பைப் பெற சுய அடையாள ஆவணம் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட சான்றுகளுடன் அருகிலுள்ள வி ஸ்டோருக்கு செல்லவும்.
நீங்கள் தற்போது பயன்படுத்தும் மொபைல்ஃபோனை கூடவே எடுத்துச் செல்வது சேவைகளை உடனடியாக பெற உதவும். உங்களது மொபைல்ஃபோன் உங்கள் கையிலேயே இருப்பதால் இ-சிம் ஆக்டிவேஷன் செய்யப்படும்போது உருவாக்கப்படும் QR குறியீட்டை உடனடியாக ஸ்கேன் செய்யமுடியும்.
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் QR குறியீடு ஒரு முறை மட்டுமே ஸ்கேன் செய்ய பயனுள்ளதாக இருக்கும்இ மேலும் இந்த குறியீட்டை ஸ்கேன் செய்யும் 2 மணி நேரத்திற்குள் இ-சிம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.