June 17, 2021
தண்டோரா குழு
வோடஃபோன் ஐடியா-ன் வர்த்தக செயல்பாட்டு சேவைகளுக்கான பிரிவான வி பிசினஸ், வாய்ஸ் கால்கள் முக்கிய ஆதாரவளமாக இருக்கும் வர்த்தகங்களுக்கென ப்ரத்யேகமான முழுமையாக நிர்வகிக்கப்படும் மேனேஜ்டு எஸ்ஐபி சர்வீஸ்-ஐ வழங்குகிறது.
பெரும்பான்மையான இந்திய பிபிஒ-க்கள் மற்றும் கேபிஒ-க்கள், வங்கி சார்ந்த நிதித்துறையான, டெலி மார்கெட்டர்ஸ், விஏஎஸ் ப்ரொவைடர்ஸ், கான்பரன்ஸ் சர்வீஸ் ப்ரொவைடர்ஸ் மற்றும் இவை போன்ற செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்கள் டிடிஎம் அடிப்படையிலான பிஆர்ஐ கனேக்ஸன்களுக்காக பல நிறுவனங்களைச் சார்ந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும் இச்சேவைகள் தொடர்பான, அதன் முழுப் பலம் பற்றிய எந்தவிதமான தெளிவான பார்வையும் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் இல்லை. விஐ-வழங்கும் நிர்வகிக்கப்படும் சேவைகளின் மூலம், வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாய்ஸ் சேவைகளின் செயல்பாட்டு வடிவமைப்பை மிகவும் பாதுகாப்பாகவும், இடையூறுகள் எதுவும் இல்லாமலும், எளிதில் கண்காணிக்கவும், செயல்பாடுகளை அளவிடவும் முடியும். மேலும் இந்த சேவைகள் அனைத்தும், வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாட்டுக்காக நிறுவப்பட்ட டெலிஃபோன் நெட்வொர்க்கின் முழுவிவரங்களையும், எளிதில் பெறமுடியும்.
இச்சேவைகளிலிலேயே மிகச்சிறந்த எஸ்எல்எ-க்கள், வாய்ஸ் அனலிடிக்ஸ், க்வாலிட்டி ஸ்கோர்ஸ் மற்றும் சேவையின் ஆற்றலை மேலும் அதிகரிக்க செய்யும் சிறப்பம்சங்களையும் பெறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் டெலிபோன் நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த நிர்வகிப்பையும் சுலபமாக மேற்கொள்ளமுடியும்.
மாறுபட்ட துறைகளைச் சேர்ந்த பல்வேறு வர்த்தகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்கு வாய்ஸ் என்பது முக்கிய ஆதாரமாக இருக்கும் பட்சத்தில், நிலையாக பொருத்தப்படும் டெலிபோன் சேவையான ஃபிக்ஸ்ட் டெலிபோனி சேவை என்பது மிக மிக முக்கியம்.
உலகளவில் ஃபிக்ஸ்ட் டெலிபோனி என்பது லெகஸி டிடிஎம்-ல் இருந்து எஸ்ஐபி-க்கு மாற்றம் கண்டு வளர்ச்சியடைந்து வருகிறது. புதிய தலைமுறை தொழில்நுட்பத்திலான ஐபி நெட்வொர்க்குகளுக்கு ஏற்ற வகையில் செயல்படும் நெட்வொர்க்குகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதேபோல் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் தொடர்பு முறை, வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் பாணி போன்றவை சமீப காலமாக எஸ்ஐபி டிரன்க் சர்வீஸ்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன.
மேனேஜ்ட் எஸ்ஐபி சேவைகளை வர்த்தக நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்துவது குறித்து வோடஃபோன் ஐடியா லிமிடெட்டின் சீஃப் எண்டர்ப்ரைஸ் பிஸினெஸ் ஆபிஸர் அபிஜித் கிஷோர் கூறுகையில்,
வி மேனேஜ்ட் எஸ்ஐபி சர்வீஸ்-ன் அறிமுகம் மூலம், தங்களது வாய்ஸ் செயல்பாடுகள் மீது முழுமையான கட்டுப்பாடு, கண்காணிப்பு மற்றும் தங்களது வாடிக்கையாளர்கள் அல்லது உள்நிர்வாக பங்குதாரர்களுக்கான வாய்ஸ் சேவைகளின் செயல்திறன் ஆகியவற்றை செயல்படுத்த உதவும் ஃபிக்ஸ்ட் டெலிபோனி தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் நிறுவனமாக வி பிசினஸ் உருவெடுத்து இருக்கிறது.இந்த குறிப்பிடத்தக்க சேவையை எங்களது செயல்பாடுகளில் இணைத்திருப்பது, ஒரு முழுமையான தகவல் தொடர்பு தீர்வுகளை வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்குவதோடு,வாடிக்கையாளர் நிறுவனங்கள் தங்களது பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றத்திற்காக தொடர்பு கொள்ளும் முறையில் பெரும் மாற்றம் உருவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
மிகத் தனித்துவமான, வி மேனேஜ்ட் எஸ்ஐபி சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் கவனிக்கத்தக்க நன்மைகளில் ஒன்று எளிதில் அளவிடக்கூடிய மேம்பட்ட சேவை தரம் பல பைலட் நம்பர்களுடன் கூடிய சிங்கிள் ட்ரங்க் – பல வணிகங்களைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் செலவீனங்களைப் பற்றி தெரிந்துகொள்ள இது உதவுகிறது.
சிங்கிள் ட்ரங்கில் அன்லிமிடெட் வாய்ஸ் சேனல்கள் ஃ அமர்வுகள் ஒரு சிங்கிள் ட்ரங்கில் அதிகப்பட்சமாக, எந்த வரம்பும் இல்லாமல் எத்தனை சேனல்களையும் பயன்பாட்டுக்கு உட்படுத்தம் முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எத்தனை அமர்வுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒரே கனெக்ஷனில் பராமரிக்க இது உதவுகிறது, இதன் மூலம் செயல்பாட்டு நிர்வாகம் எளிதாக்கப்படுகிறது. நிகழ்நேர அறிக்கைகளை பெறவும், நெட்வொர்க்கை மதிப்பாய்வு செய்யவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான போர்டல் உதவுகிறது. குரல் வளங்களின் செயல்திறனைக் கண்டறிய சிக்கல்களை முன்கூட்டியே கண்காணிக்கும் வாய்ப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
கேபிஐ-களின் கேட்வேயை தகர்த்து மேற்கொள்ள முயற்சிக்கும் மீறலுக்கான ஆட்டோ டிக்கெட் முறை, பழுதுபார்க்க தேவைப்படும் சராசரி நேரத்தை குறைப்பதை உறுதி செய்கிறது. தவறு ஏதேனும் ஏற்பட்டால், ப்ரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை குழு எஸ்.எல்.ஏ அளவுருக்களின் மீதான மீறலை சரி
செய்ய விரைவாக செயல்படும்.ஹார்ட்வேர்களின் பழுது நீங்கலாக, தேவைப்படும் ஹார்ட்வேர்களை வாங்குவதற்கான செலவு மற்றும் மனிதவள செலவு உள்ளிட்ட செயல்பாட்டுக்கான செலவுகளை எதிர்காலத்திற்கான தொழில்நுட்பம் வெகுவாக குறைக்க உதவுகிறது.