February 4, 2021
தண்டோரா குழு
பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் வரும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலையானார். இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அவர் தற்போது பெங்களூருவில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சசிகலா
அமமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் இருந்து சசிகலா பிப்.7ல் தமிழகம் வருவதாக கூறினார்.
இந்நிலையில், சசிகலா வருகிற 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று கூறியுள்ளார்.