May 19, 2021
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான வி, தனது 60 மில்லியனுக்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கென ப்ரத்யேக கோவிட் -19 நிவாரண சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த ப்ரத்யேக நிவாரண சலுகைகள், குறைந்த வருமானமுடைய வி வாடிக்கையாளர்கள் பெரும்தொற்றுநோயின் இரண்டாவது அலை நிலவும் இத்தருணத்தில், தங்களது உறவினர்கள் நண்பர்களுடன் எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் இணைந்திருக்க உதவுகிறது.
சிறப்பு நிவாரண சலுகையாக, தற்போது நிலவி வரும் நிலைமையைக் கருத்தில் கொண்டு வி 60 மில்லியனுக்கும் மேற்பட்ட தனது குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 49 ரூபாய் பேக்-ஐ இலவசமாக வழங்குகிறது. இந்த பேக், 38 ரூபாய் மதிப்பிலான அழைப்பு நேரம் மற்றும் 100 எம்பி தரவு ஆகியவற்றுடன் 28 நாட்கள் செல்லுபடியாக கூடியதாகும். இந்த சிறப்பு நிவாரண சலுகை மூலம் வி வாடிக்கையாளர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பாக இணைந்திருக்க உதவுவதோடு, இந்த சவாலான காலங்களில் தேவையான அனைத்து தகவல்களையும் பெற உதவுகிறது.
அன்பு பாராட்டும் ஒரு சிறப்பு முயற்சியாக, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய இந்த சலுகையின் மூலம், விஐஎல் இந்தியாவில் உள்ள குறைந்த வருமானமுள்ள வாடிக்கையாளர்களுக்காக 2,940 மில்லியன் மதிப்பிலான பலன்களை நீட்டித்து வழங்கியிருக்கிறது.
மேலும் கூடுதலாக, 79 ரூபாய் மதிப்புடைய புதிய காம்போ வவுச்சர் – ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு ரீசார்ஜ் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு பெரும் பலன்களை அளிக்கும் வகையில், 128 ரூபாய் மதிப்பில் இரு மடங்கு அழைப்பு நேரம் மற்றும் 200 எம்பி அளவிலான இரு மடங்கு தரவு வாய்ப்புகளுடன் 28 நாட்களுக்கும் செல்லுபடியாகும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சலுகை காலம் மட்டுமே செல்லுபடியாகும்.
மேலும் விவரங்களுக்கு, myvi.in அல்லது My Vi மொபைல் செயலியைப் பார்வையிடவும். மேலும் விவரங்களுக்கு www.MyVi.in மற்றும் www.vodafoneidea.com ஆகிய இணையதளங்களை அணுகலாம்.