• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால் அதை அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயார் – கமல்

June 11, 2018 தண்டோரா குழு

விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தாக் அதை அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயார் என கமலஹாசன் கூறியுள்ளார்.

எந்த மதத்தையும் சார்ந்திருக்கிறது பாவமில்ல பிரதர் தேச துரோகியாக இருக்க கூடாது என்ற வசனத்துடன் விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹசனும், இந்தி ட்ரைலரை அமீர்கானும் தெலுங்கு ட்ரைலரை ஜூனியர் என்.டி ஆரும் வெளியிட்டனர். விஷ்வரூபம் -2 பட ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன்,

விஷ்வரூபம் -2 படத்திற்கு கவுதமி சிறப்பாக ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டும் படி வற்புறுத்தப்பட்டேன். இப்போது அந்த வற்புறுத்தல்கள் இருக்காது. அது வேறு ஒரு பெயரில் உருவம் மாற்றி மாறுவேடத்தில் வந்த எதிர்ப்பு தான். முதல் படத்திலேயே அவர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை என்பது நிரூபணம் ஆனது. அது அரசியல் இதில் அரசியல் வந்தால் அதை எதிர் கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்து வைத்துள்ளேன். விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வராது என நம்புகிறேன், எதிர்ப்பு வந்தால் அதை அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயார். விஸ்வரூபம் 2 விஸ்வரூபம் படத்தின் நீழ்ச்சியும், தொடர்ச்சியும் மட்டுமல்ல முன் கதையும் இருக்கிறது. யார் இந்த விஸாம் அஹ்மது கஷ்மீரி என்பதை விளக்கும் படமாக இது இருக்கும். திரைபடம் வேறு அரசியல் வேறு திரைப்படத்தையும் அரசியலையும் சேர்த்து குழப்பக் கூடாது என்றார்.

மேலும் படிக்க