• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாய மின் இணைப்பு விரைவு தட்கல் திட்டம்

December 20, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட சோமனூர், குனியமுத்தூர் மற்றும் நெகமம் கோட்டங்களில் விவசாய விண்ணப்பம் பதிவு செய்து நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் புதியதாக விவசாய மின் இணைப்பு பெற விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு தட்கல் திட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர் உரிய ஆவனதுடன் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுக வேண்டும்.

கட்டண விவரம்,5.0 குதிரைத்திறனுக்கு ரூ. இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம், 7.5 குதிரை திறனுக்கு இரண்டு லட்சத்து எழுபத்தைந்தாயிரம், 10 குதிரை திறனுக்கு ரூ. மூன்று லட்சம், 15 குதிரைத்திறனுக்கு ரூ. 4 லட்சமும் வீதம் ஆகும். ஒருமுறை கட்டணம் செலுத்தும் பட்சத்தில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என கோவை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் குப்புராணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க