• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன் கருவிகள் – கோவை மாணவர்கள் அசத்தல் !

October 9, 2021 தண்டோரா குழு

மின்சார வாகனங்கள் , விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன் கருவிகளை குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தயார் செய்து அசத்தியுள்ளனர்.

கோவை சரவனம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியின் நிறுவனர் அருட்ச்செல்வர் டாக்டர் மகாலிங்கம் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும், காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஆனந்த ஜோதி வாரம் எனும் நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து மாணவ எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட நம்பிக்கை பற்றிய சிறுகதைகளின் தொகுப்பு, குமரகுருவின் பங்கு அமைப்பின் மூலம் சமூக நலன் கருதி 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

தொடர்ந்து குழ்நதைகளின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் புதிய முயற்சிகளுக்கான உத்வேகத்தை வளர்ப்பதற்கான தொழில்முறை கல்வித் திட்டம் , மற்றும் குமரகுரு கற்றல் மேம்பாடு, உதவி திட்டம் குறித்து குமரகுரு மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் படைப்புகளுக்கான கண்காட்சியின் ” புதிய திட்டத்தை ,ஐ.இ.டி.எஸ்-ன் இணை இயக்குநர் மற்றும் தலைவர் பழனிவேல் துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் புறஊதா கதிர் கிருமிநாசினி ரோபோ உள்ளநாட்டுப் தயாரிப்பான மின்சார வாகனங்கள் , விவசாய நிலத்தில் உரம் தெளிக்கும் ட்ரொன் கருவி என மாணவர்களின் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தினர். எமரால்ட் நிறுவனத்துடன் இணைந்து 21 சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களுக்கான போட்டி நடைபெற்றது.

மேலும் படிக்க