• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு பஸ்பாஸ், ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

July 21, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு. பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில்,மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை,கோட்டூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, புலுவப்பட்டி, மேட்டுப்பாளையம்,
சூலூார், காரமடை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கோவையில் உள்ள உழவர்
சந்தைக்கு காய்கறிகள் உற்பத்தியை பேருந்தில் கொண்டு வருகிறார்கள்.

தினசரி காலையில் வந்து மதியம் வரை மார்க்கெட் வருகிறார்கள்.
விவசாயிகள், விவசாய குடும்பத்தினர், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வரும்பொழுதும், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும்போதும் விவசாய
பணிகள், விவசாய கூட்டங்களில் பங்கேற்கும் வரும் போதும் பேருந்து கட்டணங்கள் அவர்களுக்கு சுமையாக உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விவசாயிகளுக்கு
இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

மேலும் 60வயதை கடந்த விவசாயிகளுக்கு
மாதாந்திர ஓய்வு ஊதியமாக ரூ-5000/-ம் வழங்க வேண்டும். இந்தியாவிலேயே முதல் முதலில் தமிழகத்தில் தமிழக அரசு அமல்படுத்தி முன்னுதாரணமாக
திகழ வேண்டும்.

கோவையில் உள்ள நீர் நிலைகளில் இரவு நேரங்களில் கட்டடக் கழிவுகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். தொண்டாமுத்தூர் ஒன்றியம் நரசிபுரம், பச்சா வயல் தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க