• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கோரி மின் இணைப்பு பெட்டிகளுடன் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

February 17, 2020

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பல ஆண்டுகளாக இலவச மின் சாரத்திற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கோரி மின் இணைப்பு பெட்டிகளுடன் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆள்பற்றாகுறை ,உரம் ,பூச்சி மருந்துகள் விலை ஏற்றம் ,தட்வெட்ப நிலை மாற்றம், நீர் பற்றாகுறை போன்ற காரணங்களால் விவசாயம் நாளுக்கு நாள் விவசாய உற்பத்தி குறைந்து வரும் நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போர்வெல் அமைத்து விவசாயம் செய்ய மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய விவசாயிகள், கடந்த காலங்களில் இலவச மின்சாரம் தந்துவந்த நிலையில் மின்சார வாரியம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மாற்றி 10 ஆயிரம்,25 ஆயிரம் ,50 ஆயிரம் திட்டம் என்பதை அறிவித்து இலவச மின்சாரம் இணைப்பு வழங்காமல் தற்போது வரை காலம் தாழ்த்தி வருவதாகவும் எனவே வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க ஆணை பிறபிக்க கூறி கோவை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் மின் இணைப்பு பெட்டிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க