• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகளுக்கு ஆதரவளிக்க மஹிந்த்ரா எம்-ப்ரொடெக்ட் புதிய கோவிட் திட்டம் அறிமுகம்

May 17, 2021 தண்டோரா குழு

19.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மஹிந்த்ரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா நிறுவனத்தின் பண்ணை உபகரணத் துறை, தற்போது நிலவிவரும் எதுவும் நிச்சயமற்ற இந்த காலங்களில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளது. இதன் வெளிப்பாடாக வாடிக்கையாளர்களின் நலனை மையமாக கொண்ட புதிய முன்முயற்சியாக எம்-ப்ரொடெக்ட் கோவிட் பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்த்ராவின் எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டம், புதிய மஹிந்த்ரா ட்ராக்டர் வாடிக்கையாளர்களையும்,அவர்களது குடும்பத்தினரையும் கோவிட்-19 பாதிப்பிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டத்தின் கீழ், மஹிந்த்ரா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான சுகாதார காப்பீடு, ப்ரத்யேகமான கோவிட் மெடிக்ளெய்ம் பாலிசியின் மூலம் வழங்கப்படும். இந்த காப்பீடு வாடிக்கையாளர்கள் கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டால், வீட்டில் தனிமைப்படுத்துதலின் பலன்களுடன் கூடிய காப்பீட்டை அளிக்கும்.கோவிட்-19 சிகிச்சையின் போது ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உதவும் வகையில் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை வழங்குவதன் மூலம் நிதி உதவி அளிக்கப்படும்.வாடிக்கையாளர் எதிர்பாராதவிதமாக உயிர் இழக்க நேரிட்டால், மஹிந்த்ரா லோன் சுரக்ஷா கீழ் வாடிக்கையாளர்களின் கடன் காப்பீடு செய்யப்படும். எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டம், மே 2021-ல் வாங்கிய மஹிந்த்ராவின் அனைத்து வகை ட்ராக்டர்களுக்கும் கிடைக்கும்.

எம் அண்டு எம் லிமிடெட் நிறுவனத்தின் பண்ணை உபகரணத் துறைத் தலைவர் ஹேமந்த் சிக்கா இத்திட்டம் குறித்து கூறுகையில்,

மஹிந்த்ராவில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் மீதும், நாங்கள் செயல்பட்டு வரும் வெகுஜன சமூகத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டுள்ளோம், இதன் தொடர்ச்சியாக, கோவிட் தொடர்பான பிரச்னைகளையும், சவால்களையும், எதிர்கொண்டு மீண்டு வருவதற்கான உதவிகளை இவர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் எங்களது புதிய எம்-ப்ரொடெக்ட் கோவிட் பிளான், விவசாயிகளின் நலனை மையமாகக் கொண்ட, அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு புதிய முயற்சியாகும். ஏனெனில் இந்த கடினமான காலங்களில் கூட நேர்மறையான மாற்றத்தை உத்வேகப்படுத்த நாங்கள் அவர்களுடன் துணை நிற்கிறோம். எம்-ப்ரொடெக்ட் திட்டம் மூலம் கோவிட் தொடர்பான பாதிப்புகளின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், அவர்களுக்கு சேவை செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் நாங்கள் பெருமை கொள்கிறோம். எம்-ப்ரொடெக்ட் மூலம் நம்முடைய விவசாயிகள் ஆரோக்கியமான வாழ்க்கையை தொடர்வார்கள் என்று நம்புகிறோம். என்றார்.

எம் அண்டு எம் லிமிடெட் பண்ணை பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி சுபப்ரதா சஹா கூறுகையில், மே மற்றும் ஜூன் ஆகிய இரண்டு மாதங்களும் விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமான மாதங்களாகும். ஆனால், தற்போது அவர்கள் வாழ்வில் கோவிட் -19 பல சவால்களை உருவாக்கி உள்ளது. விவசாயத்திற்கு மிக முக்கியமான இந்த மாதங்களில் நாங்கள் அவர்களுக்கு துணையாக நிற்க விரும்புகிறோம். இதன் தொடர்ச்சியாக எங்களது புதிய எம்-ப்ரொடெக்ட் கோவிட் திட்டம் விவசாயிகளின் கவலைகளைத் தீர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

மேலும் சவாலான இந்த காலக்கட்டத்தில், விவசாயிகளுக்கு நிவாரண அளிக்கும் வகையில், எம்-ப்ரொடெக்ட் திட்டம் மூலம் அவர்களுக்கு சுகாதாரம், நிதி மற்றும் காப்பீடு தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை அளிக்கிறோம். அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை அளிக்கிறோம். எங்களது விவசாயி வாடிக்கையாளர்களுக்கு மகத்தான ஆதரவை நல்கிவரும் எங்களது செயல்பாட்டு பங்குதாரர்கள் அனைவருக்கும் எங்களது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் படிக்க