January 26, 2021
தண்டோரா குழு
விவசாயிகளிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
டெல்லி போராட்டம் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளேன். உடனடியாக மத்திய பா.ஜ.க அரசு எந்த வித நிபந்தனையுத் இன்றி 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் சட்டம் நிறைவேற மாநிலங்களவையில் அதிமுக காரணமாக இருந்தது.இதை நியாயப்படுத்தி அதிமுகவும், முதல்வரும் பேசி வருகின்றனர். போராடும் விவசாயிகளை கொச்சை படுத்தி வருகின்றனர் தமிழக மக்களிடமும், இந்திய விவசாயிகளிடமும்
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை என்றார்.