• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விளையாட்டாக நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் நாளை உங்கள் வாழ்வையே சீரழிக்கலாம் – சத்யராஜ்

March 7, 2017 தண்டோரா குழு

நடிகர் சத்யராஜ் சமூக வலைத்தளங்களில் இல்லாவிட்டாலும் சமூகத்தில் நடப்பதை தெரிந்து வைத்து வெளிப்படையாக அவ்வப்போது கூறுபவர்.

இந்நிலையில், சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து தொடர்ந்து பல நடிகைகள், நடிகர்களின் அந்தரங்க போட்டோக்கள் வெளியிடப் பட்டு வருகிறது. இதை ஆர்வமாக சில இளைஞர்கள் அடுத்து என்ன என்பது போல் கேட்டு வருகின்றனர்.

இதையடுத்து, இவர்களுக்காகவே சத்யராஜ் மிகவும் உருக்கமாகவும், கோபமாகவும் ஒரு ஆடியோவை வெளியீட்டுள்ளார். அதில், ‘நீங்கள் நல்ல நண்பர்கள், காதலர் என பார்த்து தேர்ந்தெடுங்கள்.

விளையாட்டாக நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் நாளை உங்கள் வாழ்வையே சீரழிக்கலாம், பெண் என்பவள் வேற்று கிரகவாசி இல்லை, இப்படி புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் எத்தனையோ பேர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். இனியும் இதுப்போன்ற செயலை செய்ய வேண்டாம் என்றும் இதை ஒரு பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக, நானும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க