• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விளாங்குறிச்சி பகுதியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு

May 27, 2022 தண்டோரா குழு

விளாங்குறிச்சி பகுதியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் 10 டாஸ்மாக் கடைகள் இருக்கின்ற நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடை (கடை எண்:1567) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதனை அகற்ற வலியுறுத்தியும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த பகுதியில் மக்கள் அதிகம் வசித்து வருவதாலும்,கடை அமைய உள்ள இடத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் விளாங்குறிச்சி கிராமம் என்ற பெயரை மாற்றி டாஸ்மாக் கிராமம் என கூறும் அளவிற்கு அங்கு மதுபான கடைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார்,

அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அதனை எதிர்ப்பதாகவும் இதுகுறித்து ஏற்கனவே கடை உரிமையாளரிடம் தெரிவித்தும் தொடர்ந்து கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் எனவே இந்த கடையை அகற்றுவது இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே அந்த கிராமத்தில் 10 பார்கள் இருப்பதாக தெரிவித்த அவர் 3 மாநகராட்சி கவுன்சிலர்கள் இல்லமும் அங்குதான் இருப்பதாக தெரிவித்தார்.மேலும் பார் உரிமையாளர்கள் தரைகுறைவாக பேசுவதாகவும் தெரிவித்தார். திமுக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வர வில்லை என்றாலும் நேர கட்டுப்பாட்டை கடைபிடித்தால் கூட போதுமானது என தெரிவித்தார்.

விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க