• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் திரைக்கு வர உள்ள காலங்களில் அவள் வசந்தம் திரைப்படம்

October 22, 2022 தண்டோரா குழு

புதுமுகங்கள் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள காலங்களில் அவள் வசந்தம், திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

புதுமுகங்கள் நடித்து வரும் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ள காலங்களில் அவள் வசந்தம், என்ற திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.இதில் அறிமுகமாகும் கதாநாயகன், கெளசிக் ராம், மற்றும் கதாநாயகி, ஹிரோஷினி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

நான்கு காலங்களை அடிப்படையாக கொண்டு, உருவாக்க பட்ட இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதில் நடித்துள ள அனைவரும் அவரவர்களின் கதாபாத்திரத்தை முழுமையாக பூர்த்தி செய்து நடித்துள்ளதாகவும், முன்னனி திரை நட்சத்திரங்கள் பலர், இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை லொல்லுசபா சுவாமி நாதன் இத்திரைப்படத்திற்க்கு நடித்துள்ளார் எனவும், தற்பொழுது தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரும் 28ம்தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாடல் ஆசிரியர் ரேஷ்மன் குமார் கூறும்போது,

இந்த திரைப்படத்தில் 5 பாடல்கள் இடம்பிடித்துள்ளது, அனைத்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், இளமை துள்ளலுடன் வெளிவந்துள்ளது என்றார். மேலும் தான் இந்த படத்தில் ஒரு பாடலை, எழுதி பாடியுள்ளதாகவும், ஒரு பாடலை பாடகி சின்மயி பாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திரைத்துறையை நம்பி வந்த அனைத்து நடிகர்களையும் வாழவைத்த ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க