• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருப்பமில்லாத துறையில் சென்றால் முன்னேற்றம் இருக்காது – கோவையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் பேச்சு

October 30, 2025 தண்டோரா குழு

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025” என்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் 6 – ம் வகுப்பு முதல் முதல் 12 – ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்கள் சிந்தனை திறன், புதிய படைப்பாற்றல் திறமைகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் தனித்துவமான படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இக்கண்காட்சி மாணவர்கள் தம்முடைய எதிர்காலத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் புதியவற்றை ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்கிறது.

நாடு முழுவதும் இருந்து சுமார் 81 பள்ளிகள் பங்கேற்றுள்ளன. 250 புதுமையான ஐடியாக்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் தங்களது புதுமையான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் tiu மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் மிகவும் சிறப்பான புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்திய ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கு க்யூசாட் நிறுவனம் (முன்னணி விண்வெளி கல்வி நிறுவனம்), இஸ்ரோ சென்று வருவதற்கான வாய்ப்பினையும் வழங்கியது.

முன்னதாக நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்தவர்களை வரவேற்று, விழா பற்றிய விபரங்களை பார்க் கல்வி குழுமங்களின் கண்டுபிடிப்பு மற்றும் பிளேஸ்மெண்ட், இயக்குனர் டாக்டர்.எம். பிரின்ஸ் பேசினார்.

பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். அனுஷா ரவி சிறப்புரையாற்றி பேசும் போது :-

1997-ஆம் ஆண்டில் ஏர்ரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவை தொடங்கினோம். எங்கள் கல்லூரியில் இந்தப் பாடப் பிரிவில் கல்வி பயின்ற பல மாணவர்கள் தற்போது இஸ்ரோவில் பணியாற்றி வருவது பெருமைக்குரியது.

அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கான விஞ்ஞான கண்காட்சி போட்டிகளை நடத்தி, அவர்களின் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கிறோம்.

கடந்த ஆண்டு, அரசூர் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய கண்பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த கண்டுபிடிப்பு தொடர்பான வீடியோவை ஒரு கோடி பேர் பார்த்து பாராட்டியுள்ளனர். மேலும், அந்த மாணவர்கள் மலேசியா சென்று தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி,நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 81 பள்ளிகள் பங்கேற்றுள்ளன. 250 புதுமையான ஐடியாக்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இளம் தலைமுறையின் அறிவுத் திறன் வளர்ச்சிக்கு இது சிறந்த தளமாக அமைகிறது.

விஞ்ஞானம் என்பது வெறும் பாடமாக அல்ல் அது நாட்டின் முன்னேற்றத்தின் அடிப்படை சக்தி. இளம் தலைமுறை விஞ்ஞானத்தை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலக அரங்கில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும்.

இஸ்ரோவில் தற்போது பயன்படுத்தப்படும் ராக்கெட் இன்ஜின்,விஞ்ஞானி நம்பி நாராயணன் உருவாக்கியதே என்பதை பெருமையுடன் நினைவுபடுத்துகிறேன். அவரைப்போன்ற விஞ்ஞானிகள் தான் இன்றைய மாணவர்களுக்கு சிறந்த முன்மாதிரிகள், என அனுஷா வலியுறுத்தினார்.

பார்க் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர். பி.வி.ரவி,தலைமையுரையாற்றி பேசியதாவது:- விஞ்ஞானிகளின் தியாகமும் அவர்கள் சந்தித்த சவால்களும் இன்றைய தலைமுறைக்கு ஊக்கமாக உள்ளன என்று பி.வி. ரவி தெரிவித்தார்.

நிகழ்வற்கு சிறப்பு விருந்தினராக பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன்கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிகளை வழங்கி பேசியதாவது:-

இந்த அறிவியல் கண்காட்சியில் ஏராளமான பள்ளிகள் பங்கேற்றுள்ளன.பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இளம் மாணவர்கள் தங்களின் திறனையும் சிந்தனையையும் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.பள்ளிப் பருவத்திலேயே ப்ராஜக்ட் என்ற கருத்தை புரிந்து அதில் ஈடுபடுவது இன்றைய மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. நான் 1966-ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்தபோது, அப்போது வெறும் 23 பேரே பணியாற்றினோம். இப்போது 30,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இஸ்ரோவில் பணியாற்றி வருவது இந்தியாவின் வளர்ச்சியின் சான்றாகும்.

முதல் ராக்கெட்டின் அகலம் மூன்று அடி. இன்று, அதே ராக்கெட் 10 அடி அகலமடைந்துள்ளது. அப்போது மாட்டு வண்டி, சைக்கிள் போன்றவற்றில் ராக்கெட்டுகளை எடுத்துச் சென்று சோதனை செய்தோம். இன்று, அமெரிக்காவுக்குப் பிறகு அதிக ராக்கெட் தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மறக்க முடியாத பெருமை. தற்போது இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் பல ராக்கெட்டுகள் விகாஸ் என்ஜின் மூலம் இயங்குகின்றன் அதை உருவாக்கியதில் பங்காற்றியதில் நான் பெருமைப்படுகிறேன்,என அவர் நினைவுகூர்ந்தார்.

உங்களுக்குப் பிடித்த துறையைத்தான் தேர்ந்தெடுத்து அதில் முழு மனசார உழையுங்கள்.விருப்பமில்லாத துறையில் சென்றால் முன்னேற்றம் இருக்காது. ஆர்வமுள்ள துறையில் விடாமுயற்சி காட்டினால்,உங்கள் வளர்ச்சியும் நாட்டின் முன்னேற்றமும் ஒன்றாக உயர்ந்திடும், என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலர் பங்கேற்று கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

பார்க் கல்வி குழுமங்களின் ஏரோநாட்டிக்கல் பயிலும் மாணவர்கள் கண்டுபிடித்த ஒரு செயற்கைக்கோள் சோதனை முயற்சியாக ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு சிறப்பு விருந்தினர் டாக்டர்.நம்பினாராயணன் முன்னிலையில் சோதனை முயற்சியாக பறக்க விடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை அரசூர், அரசு பள்ளி பள்ளி வென்றது.

மேலும் படிக்க