June 18, 2018
தண்டோரா குழு
கடந்த காலங்களில் நடந்த திரைப்பட விழாக்கள்,விருது வழங்கும் நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டனர்.இவை தற்போது வியாபார நோக்கில் மாறியுள்ளன.இந்தப் பயனை நடிகர்,நடிகைகளும் பெற வேண்டும் என்று நடிகர் சங்க சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி,விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதார ரீதியில் பயன்பட்டால் நல்லது. இல்லையெனில் தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடைப் பெற்றால் சிறப்பு.அவ்வாறு இல்லையெனில் விழாக்களில் நடிகர்,நடிகைகள் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனையேற்று,ஐதராபாத் ஃபிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில்,நயன்தாரா,குஷ்பு சுந்தர், கார்த்தி,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.இந்நிலையில் அவர்களுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.இதன்மூலம் பல ஏழை கலைஞர்களின் குடும்பங்களுக்கு உதவ முடியும்.இதனை அனைத்து திரைப்பட கலைஞர்களும் பின்பற்ற வேண்டுமென அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.