• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருது கிடைத்த சந்தோஷத்தில் நடனமாடிய தொழிலதிபர் மரணம்

April 5, 2018 தண்டோரா குழு

ஆக்ராவில் தொழிலதிபர் ஒருவர் விருது கிடைத்த சந்தோஷத்தில் மேடையில் நடனமாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவில் டிராவல் ஏஜண்ட் என்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில்   விஷ்ணுபாண்டே (53) என்ற தொழிலதிபருக்கு விருது வழங்கப்பட்டது.இவரது பெயரை அறிவித்தவுடன், சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்ற அவர் எழுந்து சென்று அனைவரது  முன்னிலையிலும் மேடையில் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில், நடனமாடிக்கொண்டிருந்த விஷ்ணுபாண்டே திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.விருது வாங்கிய சந்தோஷத்தில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்க