• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு

September 28, 2017 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வு செய்யும் பொருட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நான்கு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சிவகாசி,விருதுநகர்,சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டங்களுக்கு வட்டசியாளர்கள் மற்றும் துணை வட்டாச்சியாளர்கள் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் 123 பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் 23 பட்டாசு சேமிப்பு கிடங்கு மற்றும் 71 பட்டாசு விற்பனை செய்யும் கிடங்குகளை ஆய்வு செய்துள்ளது.மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 14 பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க