• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விராத் கோலி தான் அதற்கு பதில் கூற வேண்டும் – ஸ்மித்

March 30, 2017 தண்டோரா குழு

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இரு அணி கேப்டன்களும் பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டனர்.

அப்போது, ஆஸ்திரேலிய அணியில் குறிப்பாக இரு வீரர்களுடன், நண்பர்களாக இருக்க முடியாது என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறியிருந்தார். இதற்காக ஆஸ்திரேலியா ஊடகங்கள் விராத் கோலியை விமர்சனம் செய்தது.

இதற்கிடையில், நடைபெறவுள்ள 10வது ஐபிஎல் போட்டியில் புனே அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக களமிறங்குகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக, புனே அணியின் சார்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது கோலி கூறிய கருத்து குறித்து ஸ்மித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ஸ்மித், விராத் கோலி என் பெயரைக் குறிப்பிட்டிருப்பாரா என்பது குறித்து தெரியாது. இந்த கேள்விக்கு விராத் கோலிதான் பதில் கூற வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க