June 13, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தனது பிட்நெஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் விளையாட்டு துறை அமைச்சர் ராஜய்வர்த்தன் சிங் ரத்தோர் தனது புஸ் அப்ஸ் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து விராட் கோலி,ஹிருத்திக்ரோஷன்,சாய்னா நேவால் ஆகியோருக்கு இது போன்று பிட்னஸ் மந்த்ரா வீடியோவை பகிர வேண்டும் என்று சவால் விடுத்தார்.
இதனையடுத்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் புஸ்அப்ஸ் எடுக்கும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து அவரது மனைவி அனுஷ்கா சர்மா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கு பிட்நெஸ் சவாலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து விராத் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி பஞ்சபூத உடற்பயிற்சி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார்.மேலும்,அவர் இந்த சவாலை கர்நாடக முதல்வர் குமாரசாமி,இந்திய டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா மற்றும் 40 வயதைக் கடந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் இந்த பிட்னஸ் சவாலை விடுத்துள்ளார்.