• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: அதிகாரி சிறையில் அடைப்பு

September 26, 2021 தண்டோரா குழு

கோவையில் இந்திய விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் கொடுத்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் கோவை விமான படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கோவை காவல் துறையினர் கைது செய்து
நேற்று இரவு அதிகாரி லெப்டினல் அமிர்தேஷ் , நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார்.

விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் கூறும்போது லெப்டினல் அமிதேஷ் மீது 376 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் தன்மை இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க