• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் – சர்காருக்கு கமல் ஆதரவு

November 8, 2018 தண்டோரா குழு

விமர்சனங்களை ஏற்க துணிவில்லாத அரசு தடம் புரளும் என சர்கார் படத்திற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்கிகளில் வைப்பட்டுள்ள விஜயின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சர்கார் படத்திற்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹசான் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமலஹசான் தன் டுவிட்டர் பக்கத்தில்,

முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க